தும்மல், ஆஸ்துமா, கண் அரிப்பு: மகரந்த அலர்ஜி எச்சரிக்கை!!
7 பங்குனி 2026 சனி 15:43 | பார்வைகள் : 2757
மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் அலர்ஜிகள் அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக மகரந்தமணிகள் (Pollens) அதிகமாக உருவாகி, அவை நீண்ட காலம் காற்றில் நிலைத்திருக்கின்றன.
நீங்கள் அலர்ஜி கொண்டவராக இருந்தால், இதை ஏற்கனவே கவனித்திருக்கலாம். கடந்த சில நாட்களில் இருந்த நல்ல வானிலை அவற்றின் பரவலை அதிகரித்துள்ளது.
மருத்துவர்கள் இதை “அவசர நிலை” என்று குறிப்பிடுகின்றனர். பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் அலர்ஜி ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த நிலை விரைவில் மாறப் போவதில்லை. இப்போது மகரந்த பருவம் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் முன்பாகத் தொடங்குகிறது. “பிராந்தியத்தைப் பொறுத்து இது ஒரு வாரம் முதல் மூன்று வாரம் வரை முன்பாகத் தொடங்குகிறது. அறிகுறிகள் மிகவும் கடுமையாக உள்ளன; பலர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது நாட்டின் முழுவதும் அதிகமாக காணப்படும் ஆல்டர் (aulne) மரத்தின் மகரந்தங்களால் ஏற்படுகிறது,” என்று பரிஸில் பணிபுரியும் அலர்ஜி நிபுணர் டாக்டர் சோபி சில்க்ரே-க்ரியூ (Sophie Silcret-Grieu) விளக்குகிறார். சில நோயாளிகள் பிப்ரவரி மாதத்திலேயே பாதிக்கபட்டுள்ளனர். ஆல்டர் (Aulne), பேர்ச் (Bouleau), சைப்பிரஸ் (Cyprès), ஹேசல் (Noisetier), மற்றும் ஃப்ரேன் (Frêne) மரங்களின் மகரந்தங்கள் மற்றும் புல் வகை (graminées) மகரந்தங்கள் பரவத் தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு, “சில நோயாளிகள் பிப்ரவரி மாதம் முதல், சில நேரங்களில் ஜனவரி இறுதியிலிருந்தே பாதிக்கப்படுகின்றனர்,” என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இந்த அலர்ஜிகள் “ஆகஸ்ட் மாத இறுதி அல்லது சில நேரங்களில் செப்டம்பர் வரை” நீடிக்கக்கூடும். “இந்த நோயாளிகளுக்கு ஆண்டில் சுமார் மூன்று மாதங்கள் மட்டுமே சாந்தமாக இருக்கும்; மீதமுள்ள காலம் முழுவதும் அவர்கள் பாதிப்படைகிறார்கள்,” என்று மருத்துவர் கூறுகிறார். கூடுதல் காரணமாக சஹாரா காற்று மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில், சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த காற்று கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியது.
அலர்ஜியைத் தவிர்க்க மருத்துவர்களின் ஆலோசனை:
- வீட்டை காலை மற்றும் மாலை நேரங்களில் காற்றோட்டம் செய்யவும்
- மதிய நேரத்தில் வெளியில் விளையாட்டு அல்லது உடற்பயிற்சியை தவிர்க்கவும்
- வீட்டுக்கு வந்தவுடன் முகம் மற்றும் முடியை கழுவிக்கொள்ளவும்
- வெளியில் செல்லும்போது தேவையெனில் முகக்கவசம் (mask) அணியவும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan