Paristamil Navigation Paristamil advert login

மின்சார வாகன உற்பத்தியில் புதிய சாதனையை எட்டியுள்ள Volkswagen

மின்சார வாகன உற்பத்தியில் புதிய சாதனையை எட்டியுள்ள Volkswagen

6 பங்குனி 2026 வெள்ளி 14:38 | பார்வைகள் : 401


Volkswagen Group தனது மின்சார வாகன உற்பத்தியில் புதிய சாதனையை எட்டியுள்ளது.

உலகளவில் 40 லட்சம் முழுமையான மின்சார வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில், Volkswagen உலகின் முன்னணி 5 BEV (Battery Electric Vehicle) உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக, ஐரோப்பாவில் 27 சதவீத சந்தைப் பங்குடன் தெளிவான முன்னணி நிறுவனமாக உள்ளது.

Volkswagen-ன் முதல் மின்சார வாகனம் VW e-up! 2013-இல் அறிமுகமானது. அதன் பின்னர் VW e-Golf 2014-இல் வெளியிடப்பட்டது.

2019-இல் MEB (Modular Electric Drive Matrix) அடிப்படையிலான தயாரிப்பு வரிசை அறிமுகமானது. இதுவரை 30 இலட்சம் MEB வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Volkswagen தற்போது 30-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை (compact கார்கள் முதல் Luxury SUV வரை) வழங்குகிறது.

கூடுதலாக, Scania, MAN, International, Volkswagen Truck & Bus போன்ற பிராண்டுகள் மூலம் மின்சார லாரிகள் மற்றும் பேருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

உற்பத்தி

77 சதவீத வாகனங்கள் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

20 சதவீதம் சீனாவில், 3 சதவீதம் அமெரிக்காவில், மேலும் பிரேசிலில் வணிக வாகன உற்பத்தி தொடங்கியுள்ளது.

விநியோகம்

ஐரோப்பா - 68 சதவீதம்

சீனா - 20 சதவீதம்

அமெரிக்கா- 8 சதவீதம்

பிற நாடுகள் - 5 சதவீதம் 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026