சஹாரா மணற்புயல் - உங்கள் மகிழுந்தை சுத்தம் செய்யாவிட்டால் விதிக்கப்படும் அபராதம்!
4 பங்குனி 2026 புதன் 15:53 | பார்வைகள் : 2254
சஹாராவிலிருந்து எழுந்த மணல் மேகம், இந்த செவ்வாய்க்கிழமை 3 மார்ச் முதல் தெற்குப் பகுதி பிரான்சை கடந்துச் செல்கிறது. அதன் தாக்கத்தால் உங்கள் மகிழுந்து அழுக்காகியிருந்தால், அபராதத்தைத் தவிர்க்க அதைச் சுத்தம் செய்வது அவசியமாகும்.
அபராதமும் சிறிய தொகை அல்ல. வரவிருக்கும் நாட்களில் சஹாரா தூசித் துகள்களின் தீவிரம் முழு நாட்டையும் பாதிக்கும். குறிப்பாக நாளை வியாழக்கிழமை பாதிப்பு உச்சமடையும்என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை முதல், சஹாரா மணல் தூசிகள் பிரான்சின் தெற்குப் பகுதியைப் பாதித்தன. இன்று புதன்கிழமை மையம் மற்றும் மேற்குப் பகுதியையும், நாளை வியாழக்கிழமை வடபகுதியையும் பாதிக்கும் எனவும், வார இறுதிக்குள் இவை குறைவடைந்து விடும் எனவும், பிரான்சின் வானிலை அவதானிப்பு மையமான Météo France தெரிவித்துள்ளது.
மகிழுந்து உரிமையாளர்களுக்கு சிறிய அளவு சுத்தம் செய்தல் அவசியமாகும். பிரான்சில், மகிழுந்தை சுத்தமாக வைத்திருப்பது, குறைந்தபட்சம் முன்பக்க கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டும், என்பது கட்டாயமாகும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படலாம்.
மூன்றாம் வகை அபராதம்
உங்கள் மகிழுந்தின் அழுக்கு, ஓட்டுநரின் சாலைக் பார்வைத் தெளிவை பாதித்தால், சோதனையின் போது நீங்கள் மூன்றாம் வகை அபராதத்திற்கு உட்படலாம்.
அபராதத் தொகை 68 யூரோ. இதனை உடனடியாக அதன் கால எல்லைக்கு முன்னர் செலுத்தினால், இது 45 யூரோவாகக் குறையும்.
அதே அளவு அபராதம், உங்கள் முன்பக்க கண்ணாடி (pare-brise) சேதமடைந்திருந்தாலும், அல்லது தண்ணீர் தெளிக்கும் கருவிக்கான திரவம் (liquide de lave-glace)) உள்ள குழாய் காலியாக இருந்தாலும் விதிக்கப்படலாம்.
அவதானம்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan