இன்றிரவு புதிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்!
4 பங்குனி 2026 புதன் 15:24 | பார்வைகள் : 2204
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், மத்திய கிழக்கின் மோசமாகும் போர் நிலவரத்தைப் பற்றி ஆலோசிப்பதற்காக, இன்று புதன்கிழமை இரவு 20h00 மணிக்கு புதிய பாதுகாப்பு ஆலோசனைச் சந்திப்பை கூட்டியுள்ளார்.
இந்தத் தகவலை அமைச்சரவை கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியறிக்கையில் பிரான்ஸ் அரசின் பேச்சாளர் மோத் பிரெஜோன் (Maud Bregeon) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி, செவ்வாய்க்கிழமை, மத்திய கிழக்கில் உள்ள பிரெஞ்சு குடிமக்களை நாடு திரும்பச் செய்யும் முதல் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அப்பகுதியில் இராணுவப் பாதுகாப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரண்டு விமானங்கள், மத்திய கிழக்கில் புலம் பெயர்ந்த பிரெஞ்சுக் குடிமக்களை மீட்டு பரிஸ் வந்தடைந்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடந்தால் எதிர்த்தாக்குதல் நடாத்தவும் கனரக ஆயுதங்கள், வீரர்கள் மற்றும் Rafale போர்விமானங்களைத் தாங்கிய போர்க்கலமான சார்ள்-து-கோல் மத்தியதரைக் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan