எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் அதிரடி விளக்கம்
10 சித்திரை 2026 வெள்ளி 12:18 | பார்வைகள் : 1303
மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று(09) உரையாற்றிய அவர், எப்ஸ்டீன் அல்லது அவரது உதவியாளர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் (Ghislaine Maxwell) தனக்கு ஒருபோதும் நட்பு இருந்ததில்லை என்றும், இது தொடர்பான பொய்கள் இன்றுடன் முடிவுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நியூயார்க் நகரின் சமூகச் சூழலில் ஒரே மாதிரியான விருந்துகளுக்குத் தானும் தனது கணவர் டொனால்ட் ட்ரம்ப்பும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் அது எப்ஸ்டீனுடன் தமக்குத் தொடர்பு இருப்பதைக் குறிக்காது என்றும் அவர் விளக்கமளித்தார்.
2002ஆம் ஆண்டு மெலனியா, மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றைக் கொண்டு இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், "நான் எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்ட நபர் அல்ல" என அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பகிரங்க விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan