தமிழக சட்டசபை தேர்தல்: காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
10 சித்திரை 2026 வெள்ளி 09:44 | பார்வைகள் : 1001
தமிழகத்தில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும், ரேஷன் அட்டைக்கு தலா 2 ஆயிரம் நிதியுதவி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டார்.தமிழகத்தை முன்னேறறுவோம் என்ற பெயரில் 10 தலைப்பில் 36 பக்கங்களை கொண்ட வாக்குறுதிகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
* ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்க நடவடிக்கை
* காவல்துறையி்ல 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்
* பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்
* முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை
* 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
* தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மன நல மருத்துவமனைகள்
* மனநல முதலுதவி செய்ய 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி
* ஆரம்ப சுகாதார மைய வலயைமைப்பு பலப்படுத்தப்படும்
* அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்றல். இதற்காக ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி
* அனைத்து ரேஷன் கடைகளும் புதுப்பிக்கப்பட்ட தரமான அரிசி வழங்கப்படும்
* 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்
* விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம்
* பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்
* தமிழகத்தை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை
* 2030ம் ஆண்டிற்குள் நாய்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி மற்றும்
* இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்
* 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
* முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை
* குறைந்த விலையில் வீடுகள், விரைவான நிலப்பட்டா வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan