ரூ.8,000 கூப்பனுக்கு முதல்வர் பதவி தருவீர்களா: ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
9 சித்திரை 2026 வியாழன் 09:15 | பார்வைகள் : 374
தி.மு.க., தரும் 8,000 ரூபாய் கூப்பனை வைத்து, என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால், முதல்வர் பதவியை கொடுப்பீர்களா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் ஆலந்துார், அம்பத்துார், வில்லிவாக்கம், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
அனைத்து மதங்களுமே மது குடிப்பது பாவம் என கூறினாலும், அரசே அதை விற்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட பிறகும், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் தருகின்றனர்.
அப்படியென்றால், ஒரு நாளைக்கு, 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியாளர்கள், மக்களை வறுமையில் வைத்துள்ளனர்.
இப்போது ஐந்தாண்டு ஆட்சிக்கு பின், 2,000 ரூபாய் கொடுக்கிறோம் என்றால், வறுமை வளர்ந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
அவர்கள் அறிவிக்கும் 2,000 ரூபாய், 2,500 ரூபாய், 8,000 ரூபாய் கூப்பன், 10,000 ரூபாய் வறுமை ஒழிப்பு தொகை போன்றவற்றை, எங்கிருந்து தருவர் என்ற கேள்வி எழாத வரை, மாற்றம் ஏற்படாது.
இலவசங்கள் அறிவித்தால் தான் ஓட்டு என்றால், '௧ கிலோ தங்கம், கார், அதற்கு பெட்ரோல், ஊதியத்துடன் ஓட்டுநர்' என நான் தருவதாக சொன்னால் ஏற்பீர்களா? அப்படி கொடுத்தால், உங்களுக்கு படிப்பு, தகுதியெல்லாம் எதற்கு?
தி.மு.க., தரும் 8,000 ரூபாய் கூப்பனை வைத்து, என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால், முதல்வர் பதவியை கொடுப்பீர்களா? பைத்தியங்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம்; உதயசூரியனுக்கு போடுங்கள். ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்; நாடு, சுடுகாடாக மாறட்டும்.
இதற்கு முன், இரண்டு வயது குழந்தையை தான் கற்பழித்தனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கருவில் இருந்து வெளியே வந்தவுடனேயே கற்பழித்து விடுவர். நல்லாட்சி அமைய, சிந்தித்து ஓட்டு போடுங்கள். இல்லையென்றால் குவார்ட்டர் குடித்து விட்டு, வீட்டில் படுத்திருங்கள்.
அரை சதவீதம் ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட, கூட்டணி பேரம் நடத்தியவர்கள், என்னிடம் எப்படியெல்லாம் பேரம் பேசியிருப்பர்.
நேற்று கூட, கூட்டணி பேச்சு நடந்தது. குறிப்பிட்ட தொகுதிகளை தேர்ந்தெடுந்து போட்டியிடுங்கள். அங்கு நாங்கள் வாபஸ் பெறுகிறோம். மற்ற தொகுதிகளில் நீங்கள் வாபஸ் பெறுங்கள் என்றனர். நான் நிராகரித்து விட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan