இலங்கையில் சில்லறை வர்த்தகத்தில் ஏற்படவுள்ள டிஜிட்டல் மாற்றம்!
7 சித்திரை 2026 செவ்வாய் 18:58 | பார்வைகள் : 180
நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் 99 சதவீதம் இன்னும் நாணயத்தாள்களைச் சார்ந்ததாக காணப்படுகிறது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே க்யூ.ஆர் முறைமை மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.
தமது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்தால் தெருவோர வியாபாரியிடம் ஒரு இளநீர் வாங்கினாலும் க்யூ.ஆர் மூலம் பணம் செலுத்தும் வசதியை உருவாக்க முடியும். இதற்காக 5000 ரூபாய்க்குக் குறைவான பரிமாற்றங்களுக்கு சேவைக்கட்டணத்தை நீக்க நிதி நிறுவனங்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. குலுக்கல் முறையிலான பரிசுகள் மற்றும் பாரிய பிரச்சாரத் திட்டங்களையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
தேசிய க்யூ.ஆர் (கோட்டா) கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இத்தகைய நாணயத்தாள்களைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தையே நாம் டிஜிட்டல் மயமாக்கப் போகிறோம். தற்போது வங்கி முறைமை நன்றாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89 சதவீதமானோருக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன.
லங்கா க்யூ.ஆர் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும், அதன் பயன் மக்களைச் சென்றடைந்தது மிகக் குறைவு. இதனை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல தேசிய க்யூ.ஆர் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்துகிறோம்.
க்யூ.ஆர் தொழில்நுட்பம் எமது நாட்டில் இருந்தாலும் அதன் ஊடான கொடுப்பனவுகள் குறைவாகவே நடைபெறுகின்றன. எமது நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் 99சதவீதம் இன்னும் நாணயத்தாள்களைச் சார்ந்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே க்யூ.ஆர் முறைமை மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.
இந்த புதிய திட்டத்துக்கு மக்களை ஈர்க்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்தும் அதனை பயன்படுத்தாது குறித்து சர்வதேச நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன. எமது பொருளாதாரத்தைப் போன்றே எமது மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
தமது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்தால் தெருவோர வியாபாரியிடம் ஒரு இளநீர் வாங்கினாலும் க்யூ.ஆர் மூலம் பணம் செலுத்தும் வசதியை உருவாக்க முடியும். இதற்காக 5000 ரூபாய்க்குக் குறைவான பரிமாற்றங்களுக்கு சேவைக்கட்டணத்தை நீக்க நிதி நிறுவனங்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. மேலும், குலுக்கல் முறையிலான பரிசுகள் மற்றும் பாரிய பிரச்சாரத் திட்டங்களையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, கடந்த காலத்தில் க்யூ.ஆர் முறைமை பிரபலமடையாததற்கான காரணங்களை ஆராய்ந்து, இன்று இரண்டு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். முதலாவது,5,000 ரூபாய்க்குக் குறைவான பரிமாற்றங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இதற்கு ஒத்துழைத்த வங்கிகள் மற்றும் லங்கா பே நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இரண்டாவது நபர்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமடைந்துள்ளன. வாடிக்கையாளர் கடைக்குச் செல்லாமலேயே நபர்களுக்கு இடையே பணத்தை அனுப்ப முடிவதே இதற்குக் காரணமாகும். இனிமேல் க்யூ.ஆர் குறியீட்டை அச்சிட்டு வைத்திருப்பதன் மூலம் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பரிமாற்றங்களைச் செய்ய முடியும் என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan