கார்க் தீவு மீது பாரிய தாக்குதல் - ஈரானிய ஊடகம் அறிவிப்பு
7 சித்திரை 2026 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 216
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணிநேரக் கால அவகாசம் நிறைவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானின் மிக முக்கியமான கார்க் தீவு மீது பாரிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கைக் கொண்டுள்ள கார்க் தீவின் எண்ணெய் ஏற்றுமதி மையத்தை இலக்கு வைத்து அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
கார்க் தீவுப் பகுதியில் பல பாரிய வெடிப்புகள் நிகழ்ந்ததை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம், உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலினால் பிராந்தியத்திற்கான மசகு எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் புனித நகரமான கோம் நகருக்கு வெளியில் உள்ள ஒரு முக்கிய தரைவழிப் பாலம் அமெரிக்க - இஸ்ரேலிய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள ஏனைய முக்கிய பாலங்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கார்க் தீவு மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர இராணுவம் (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தங்களின் பொறுமை முடிந்துவிட்டதாகவும், இனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் (சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவை) உட்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பல ஆண்டுகளுக்கு முடக்கும் வகையில் பாரிய பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan