Paristamil Navigation Paristamil advert login

காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது: அண்ணாமலை பேட்டி

காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது: அண்ணாமலை பேட்டி

4 சித்திரை 2026 சனி 12:43 | பார்வைகள் : 136


காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

நான் கட்சிக்கு ரொம்ப நாட்களுக்கு முன்பாக, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டேன். மாநிலத்தின் கோர் கமிட்டியில் என்னுடைய கருத்தை இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லி இருந்தேன். கோர் கமிட்டியில் இருந்து தலைமைக்கு போன பட்டியலில் என் பெயர் கிடையாது. பியூஷ் கோயலிடமும் ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தேன்.

கட்சி என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து, என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி தான். காரணம் இந்த தேர்தலை பொறுத்தவரை எல்லோருக்கும் பணி செய்கிறேன். தமிழகம் முழுவதும் பாஜ வேட்பாளர்கள் 27 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் எல்லோருக்கும் நான் பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு ஊராக சென்று பிரசாரம் செய்கிறேன். கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என்னுடைய கடமையாக பார்க்கிறேன்.

எப்போதும் நான் வேட்பாளர் ரேஸில் இல்லை. எந்த தொகுதியையும் நான் கேட்கவில்லை; போட்டி போடவில்லை. நான் கேட்கவும் மாட்டேன்; அது என்னுடைய பழக்கமும் கிடையாது. என்னுடைய வேலை ஏப்ரல் 21ம் தேதி வரை பிரசாரம் செய்வது, அதன் பிறகு மற்றவை குறித்து பேசுகிறேன். இந்த முறை என்னுடைய சண்டை தமிழகம் முழுவதும் பிரசாரம் மூலம் தான்.

2024ல் பார்லிமென்ட் தேர்தலில் நான் போட்டியிட்ட போது, எனக்கு சிறிய வருத்தம் இருந்தது. நம்மை நம்பி நிறைய வேட்பாளர்களை போட்டி போட வைத்தோம். ஆனால் என்னால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியவில்லை. அந்த மன குறையை 2026ம் ஆண்டு தேர்தலில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை.

காலம் இருக்கிறது. காட்சிகள் மாற தான் போகிறது. நிறைய தேர்தல் வர தான் போகிறது. அன்னைக்கு நாம் போட்டி போட்டு கொள்ளலாம். அதனால் நம்முடன் அன்போடு இருக்க கூடிய மக்கள் எப்பொழுதும் அன்போடு தான் இருப்பார்கள். இந்த தேர்தலில் நமது சண்டை என்பது தமிழகம் முழுவதும் போக வேண்டும். திமுகவின் தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். அதற்கு நாம் வலிமையாக பேச வேண்டும். அது என்னுடைய பொறுப்பாக பார்க்கிறேன்.  இவ்வாறு அண்ணாமலை கூறினார்.