முதல்-அமைச்சர் விஜய் 22ம் தேதி டெல்லி பயணம்; பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
19 வைகாசி 2026 செவ்வாய் 13:39 | பார்வைகள் : 1733
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவடுத்தது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்தன. இதையடுத்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் வரும் 22ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடி தற்போது அரசு முறை பயணமாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அவர் வரும் 22ம் தேதி நாடு திரும்புகிறார்.
இதையடுத்து அன்றைய தினமே பிரதமர் மோடியை விஜய் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோர இருக்கிறார். பிரதமர் மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின்னர் பிரதமர் மோடியை விஜய் சந்திக்க உள்ள நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan