லெபனானில் ஐநா தளம் மீது தாக்குதல் - இந்தோனேசிய அமைதிப்படை வீரர் பலி
30 பங்குனி 2026 திங்கள் 13:16 | பார்வைகள் : 280
லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அட்ச்சித் அல்-குசைர் கிராமத்திற்கு அருகில் ஐநா அமைதிப்படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தோனேசிய அமைதிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறைமுக பீரங்கித் தாக்குதல் காரணமாக இந்த வெடிப்பு நேர்ந்துள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் எங்கு இருந்து நடத்தப்பட்டது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இஸ்ரேலியப் படைகளுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே லெபனான் எல்லையில் கடும் போர் நிலவி வருகிறது. கடந்த மார்ச் 02 ஆம் திகதி ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் லெபனானுக்குள் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐநா அமைதிப்படை, இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அமைதிப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின்படி போர்க்குற்றமாக கருதப்படலாம் என ஐநா எச்சரித்துள்ளது.
லெபனானில் தசாப்தங்களாகப் பணியாற்றி வரும் இந்த ஐநாஅமைதிப்படைத் திட்டம், 2026 டிசம்பர் 31 உடன் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, கடந்த 06 ஆம் திகதி இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் கானா நாட்டைச் சேர்ந்த இரு அமைதிப்படை வீரர்கள் காயமடைந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan