Paristamil Navigation Paristamil advert login

எப்போது போர் முடிவுக்கு வரும்...? ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

 எப்போது போர் முடிவுக்கு வரும்...? ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

30 பங்குனி 2026 திங்கள் 10:57 | பார்வைகள் : 258


ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராஜதந்திர பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை ஈரான் ஏற்றுக் கொண்டு இருப்பதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏர் போர்ஸ் ஒன்(Air Force One) விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்ச திட்டங்களுக்கு ஈரான் அரசு சாதகமான பதிலை அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பேச்சுவார்த்தையில் கூடுதலாக இன்னும் சில நிபந்தனைகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

போர் நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை பேச்சுவார்த்தைகள் வலுவாக இருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.