பிளவுபடுத்தும் அரசியலை செய்யும் ராகுல்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
14 மாசி 2026 சனி 12:21 | பார்வைகள் : 1400
தவறான தகவல்களை பரப்புவது, நாடகங்களை அரங்கேற்றுவதை தவிர ராகுல், காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை. பிளவுபடுத்தும் அரசியலை ராகுல் செய்கிறார்'' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா நமது விவசாயிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. தவறான தகவல்களை பரப்புவது, நாடகங்களை அரங்கேற்றுவதை தவிர ராகுல், காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை.
பிளவுபடுத்தும் அரசியலை ராகுல் செய்கிறார். அவர்கள் நமது விவசாயிகளின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய எதுவும் செய்யவில்லை, இந்தியாவின் உலகளாவிய சாதனைகளை மீண்டும் மீண்டும் குறைத்து மதிப்பிடவும், மக்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயற்சி செய்கின்றனர்.
இவர்களது நாடகம் தேசத்திற்கு மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் தனது தவறை சரிசெய்ய மறுக்கிறது, வளர்ச்சியை விட பிரிவினையை விரும்புகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது. நமது தேசமும், மக்களும் எப்போதும் முன்னேறுவார்கள். வலிமையானவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள். உலகளவில் மதிக்கப்படுவார்கள். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan