Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித்ஷா

பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித்ஷா

13 மாசி 2026 வெள்ளி 09:29 | பார்வைகள் : 172


தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை, இன்று, திருச்சி வரும், அமித் ஷா தேர்வு செய்ய உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன. பா.ஜ.,வுக்கு, 30 தொகுதிகள் வழங்க, அ.தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி காரைக்காலில் நடக்கும் பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்க, இன்றிரவு திருச்சி வருகிறார். அவர், திருச்சியில், தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., மாநில மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, அ.தி.மு.க.,விடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் விபரங்களை, தமிழக நிர்வாகிகள், அமித் ஷாவிடம் தெரிவிக்க உள்ளனர். அதனுடன், ஏற்கனவே தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக, உளவுத் துறை அளித்துள்ள பட்டியலுடன், அமித் ஷா ஒப்பிட்டு பார்த்து, பா.ஜ.,வுக்கான தொகுதிகளை தேர்வு செய்ய உள்ளார். இந்த தொகுதிகளை, தொகுதி பங்கீடு பேச்சின் போது, அ.தி.மு.க.,விடம் கேட்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்