அமைதிக்கான நடைப்பயணம் - வொஷிங்டனை சென்றடைந்த பௌத்த தேரர்கள்
12 மாசி 2026 வியாழன் 04:52 | பார்வைகள் : 282
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை 10.02.2026 நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர்.
லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது.
அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், 'அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்' என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து 'அலோகா' என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
இந்த நீண்ட பயணத்தில் பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர்.
"இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று," எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை 11.02.2027 இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan