தாய்லாந்தில் துப்பாக்கி முனையில் குழந்தைகளை சிறைப்பிடித்த இளைஞர்
12 மாசி 2026 வியாழன் 04:40 | பார்வைகள் : 1432
தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லாவின் ஹாட் யாய் (Hat Yai) மாவட்டத்தில் அமைந்துள்ள படோங்பிரதன்கிரிவாட்(Patongprathankiriwat) பள்ளியில் இன்று காலை மர்ம நபர் புகுந்து திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.
அத்துடன் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக் கைதிகளாகவும் சிறைப்பிடித்துள்ளார்.
மர்ம நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் வரை காயமடைந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் நிலைமையை குறுகிய நேரத்திலேயே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த அசாதாரண நடவடிக்கையில் ஈடுபட்ட 18 வயது இளைஞரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தாக்குதல்தாரி பிடிப்பட்டதை தொடர்ந்து பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan