அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் இஸ்ரேல்
12 மாசி 2026 வியாழன் 04:26 | பார்வைகள் : 231
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஓமானில் நடைபெற்று வரும் அணுசக்தி குறித்த மறைமுகப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் இன்று சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கை நேரப்படி, இரவு 9.30 மணிக்கு வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில், அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என நெதன்யாகு வலியுறுத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மட்டுமல்லாது, அதன் பால்ஸ்டிக் ஏவுகணைத் தயாரிப்புகளையும் முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும் என இஸ்ரேல், அமெரிக்காவை வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் வழங்கும் ஆதரவை நிறுத்தும் வரை, எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என நெதன்யாகு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அமெரிக்காவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப்பை இன்று சந்தித்த நெதன்யாகு, ஈரானின் வாக்குறுதிகளை ஒருபோதும் நம்ப முடியாது என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், இஸ்ரேலின் இந்தத் தலையீடு அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சிதைக்கும் ஒரு 'சதி முயற்சி' என ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan