திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்
12 மாசி 2026 வியாழன் 05:15 | பார்வைகள் : 228
திமுக தான் காங்கிரசிடம் அடிமையாக இருக்கிறது, என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவிலும் திராவிட மாடல் இருக்கிறது. அதனால் தான் அதிமுக வலுவாக இருக்கிறது. அதிமுக மட்டும் இலவசம் தரவில்லை. நாடு முழுவதும் இலவசம் அறிமுகம் ஆகி உள்ளன. திமுக அளித்த வாக்குறுதிகளில் 4 ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. இதனால் தான் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறோம். இதுவரை தரப்படவில்லை. கடன் வாங்குவதில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது.
உதயநிதியை துணை முதல்வர் என திமுகவினர் ஏற்கலாம். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. பொது விவாதம் நடத்த ஸ்டாலின் எங்கே அழைத்தாலும் நான் தயார். ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் பொது விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
ஊரின் பெயரை எனது பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளுங்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவர் கூறியதால் தான் எடப்பாடியை பெயருக்கு முன்னாள் சேர்த்துள்ளேன். தேஜ கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதனால் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும். முதல்வரின் கணக்கு எதுவாக இருந்தாலும், மக்களின் கணக்கு அதிமுக வெற்றி பெற வைப்பது தான். நானும் முதல்வரும் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டோம். என் வழி வேறு. ஸ்டாலின் வழி வேறு. அவரது தந்தை முதல்வராக இருந்ததால் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.
திமுக தான் காங்கிரசின் அடிமையாக இருக்கிறது. அதிமுக எந்த விதத்தில் அடிமையாக உள்ளது. பாஜவிடம் அதிமுகவை அடகு வைக்கவில்லை. 2024 ல் அதிமுக தான் தனித்துப் போட்டியிட்டது. திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. சசிகலா, பன்னீர்செல்வம் பிரச்னை முடிந்த போன ஒன்று. அவர்கள் குறித்து எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. தினகரன் உடன் இருந்தது கருத்து வேறுபாடு தான். தற்போது அது சரியாகிவிட்டது. விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என எப்படி சொல்லமுடியும். அவரை தேர்தல் களத்தில் சந்திப்போம். வலிமையான பாரதம் வளமான பாரதம் உருவாக இளைஞர்கள் துணை நிற்க வேண்டும்
சினிமாவில் தான் விஜய் சூப்பர் ஸ்டார். அரசியல் சூப்பர் ஸ்டார் அல்ல. எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சி நடத்த முடியும். அதனால் தான் எம்ஜிஆர் பெயரை விஜய் பயன்படுத்துகிறார். தவெக ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. சந்தித்தால் தான் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan