Paristamil Navigation Paristamil advert login

பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியது திமுக; முதல்வர் ஸ்டாலின்

பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியது திமுக; முதல்வர் ஸ்டாலின்

11 மாசி 2026 புதன் 06:36 | பார்வைகள் : 171


5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை  நமது திராவிட மாடல் அரசு திட்டங்கள் மாற்றி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எனக்கு ஒரு சந்தேகம் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குள் இங்க எல்லோரும் தேர்தல் பிரசாரத்தை நடத்திவிட்டார்கள். எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடத்தி இருக்கின்றனர். எம்சிசி பள்ளியின் பழைய மாணவனான நான் WCC வந்திருக்கிறேன். கூடுதல் பொறுப்புணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு உருவாக்கி இருக்கிறது. அடுத்தும் நாம் தான் வருவோம். மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம்.

தமிழகத்தில் கல்விக்காக நாம் கொண்டு வந்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் பயன் அடைந்து வருவதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மாணவிகள் அதிகளவில் பயன் அடைந்து வருகின்றனர். கிராமங்களில் பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடிய சூழலை, புதுமைப்பெண் திட்டம் இன்று மாற்றியுள்ளது. பலர் உயர்கல்வியில் நுழைந்துள்ளனர்.புதுமைப்பெண் திட்டம் தொடர்பான ஆய்வு முடிவை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல முடியாது.

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை  நமது திராவிட மாடல் அரசு திட்டங்கள் மாற்றி இருக்கிறது. 5 ஆண்டுகளில் அரசு பள்ளியில் இருந்து உயர்கல்வி படிக்க கல்லூரிக்கு தேர்வான ஆயிரக்கணக்கான மாணவர்களின் செலவை அரசே ஏற்றுக்கொண்டு உள்ளது. வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைத்தால் தான் வெற்றி பெற முடியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒரு டயலாக் வரும். 'கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது... கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது.

பக்குவத்தோடு அடைகிற வெற்றி தான் நிலைத்து நிற்கும். மாணவர்கள் பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். தனது சேமிப்புகள் அனைத்தையும் தங்களது பிள்ளைகளுடைய படிப்புக்காக செலவு கூடிய ஊர் தான் தமிழகம். கல்வியில் அதிக கவனம் செலுத்தியதால் தான் பல நாடுகளுடன் தமிழகம் இன்று போட்டி போடுகிறது. உங்களை பற்றி உங்களுடைய பெற்றோரிடம் பெருமையாக பேசினால், அதை விட பெரிய சந்தோஷம் ஏதும் இருக்க முடியாது. அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு கொடுங்கள். பெண்கள் என்றாலே அழகு தான்.

அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்பு ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன். இன்னைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகத்தில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால், டிகிரி படித்தால் போதாது.

நீங்கள் வேலைக்கு சென்றாலும், உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில், ஆராய்ச்சி படிப்பு வரை நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். இன்றைக்கு தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது. 1950ல் தமிழகத்தின் நிலைமை தலைகீழாக தான் இருந்தது. இப்பொழுது மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்