பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்று - பெண்ணொருவர் பலி!
9 மாசி 2026 திங்கள் 17:21 | பார்வைகள் : 1327
பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு 40 வயது பெண்ணொருவர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த நோய் உலகளவில் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாக இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் நவோகான் (Naogaon) மாவட்டத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணுக்கு கடந்த ஜனவரி 21ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் அறிகுறிகளாக தென்பட்டதாகவும் பின்னர், ஜனவரி 28ஆம் திகதி அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மருத்துவமனையில் அப்பெண்ணின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, அவர் நிபா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
சமீபத்தில் அந்த பெண் பயணங்களை மேற்கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனினும், அவர் தொற்று ஏற்படுவதற்கான மூலமாக கருதப்படும் பச்சை பேரீச்சம்பழச் சாற்றை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இம்மாதம் கடந்த 3ஆம் திகதி பங்களாதேஷில் தொற்று அடையாளம் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
குறித்த நோயாளியுடன் தொடர்பு கொண்டிருந்த 35 பேரை பரிசோதித்துப் பார்த்ததில், இதுவரை எவரிடமும் தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இரண்டு பேர் நிபா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து, பங்களாதேஷில் தொற்று காரணமாக குறித்த பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சில அண்டை நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடைமுறைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், இதுவரை உலக சுகாதார அமைப்பு பயண மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கவில்லை.
இந்நிலையில், உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிபா வைரஸால் ஏற்படக்கூடிய அபாய நிலை குறைவாகவே காணப்படுவதாக WHO தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் 2001ஆம் ஆண்டு முதல் 348 நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றாளர்களில் பாதியளவு எண்ணிக்கையானோர் பேரீச்சம்பழச் சாற்றை உட்கொண்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
தற்போது இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் அல்லது சிகிச்சை முறைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேவேளை இந்த நோய் இறப்பு விகிதத்தையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan