கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து நாடு விடுபட வேண்டும்: அமித்ஷா
9 மாசி 2026 திங்கள் 10:40 | பார்வைகள் : 1315
அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைந்தால் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இடதுசாரி பயங்கரவாதம் என்பது ஒரு சித்தாந்தத்தால் இயக்கப்படும் சவால்.
வளர்ச்சி அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல. கம்யூனிச சித்தாந்தம் வளர்ச்சியைத் தடுக்கிறது. அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும். கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவைக் குறிக்கும் ஒரு சித்தாந்தமாகும்.
ஜனநாயக அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் இனி இல்லை. கேரளாவில், அது ஓரளவுக்கு உயிர்வாழ்கிறது; இருப்பினும், மக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து மாற்றத்தைத் தொடங்கிவிட்டனர். அரசு ஒரு தோட்டாவை கூட சுட விரும்பவில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan