அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள்; இதோ முழு பட்டியல்
8 மாசி 2026 ஞாயிறு 09:59 | பார்வைகள் : 189
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்கள் முழுமையான வரிவிலக்கை பெறுகின்றன.
அமெரிக்காவும், இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது பற்றி இருநாடுகளும் கூட்டு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கின்றன. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் நலன் பெறுவர், அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந் நிலையில் வர்த்தக ஒப்பந்தம் மூலம் எந்தெந்த பொருட்களுக்கு முழு வரிவிலக்கு என்ற பட்டியலை தற்போது பார்ப்போம்;
• ரத்தினங்கள், வைரங்கள்
• மருந்துப் பொருட்கள்
• விமான பாகங்கள்
• ஸ்மார்ட் போன்கள்
• மசாலா பொருட்கள்
• தேநீர்
• காபி
• தேங்காய், தேங்காய் எண்ணெய்
• பாக்கு
• பிரேசில் நட்ஸ்(Brazil Nuts)
• முந்திரி பருப்பு
• செஸ்ட்நட் (chestnut)
• தாவர மெழுகு (vegetable wax)
• அவகோடா
• வாழைப்பழம்
• மாம்பழம்
• அன்னாசிப்பழம்
• காளான்
• சிலவகை பேக்கரி பொருட்கள்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan