எதிர்க்கட்சியில் இருக்கும் பலருக்கு தூக்கம் போய்விட்டது: முதல்வர் ஸ்டாலின்
7 மாசி 2026 சனி 07:33 | பார்வைகள் : 123
திருவண்ணாமலையில் நடத்திய இளைஞரணி மாநாட்டால் எதிர்க்கட்சியில் இருக்கும் பலருக்கு தூக்கம் போய்விட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நாளை (பிப்.7) நடைபெற இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: 1949ம் ஆண்டில் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சி தான் திராவிட மாடல். திமுகவை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம்.
திமுகவை வளர்த்த இளைஞர்கள் தான் தற்போது அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களாக உள்ளனர். இனிமேல் திமுகவுக்கு இளைஞர்கள் வருவார்களா என்று சிலர் வன்மத்தை வெளிப்படுத்தினர்.
திமுக மீதான அவதூறுகளை உடைத்தெறிந்து தமிழகம் முழுவதும் இளைஞர் அணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து உதயநிதி சாதனை படைத்து உள்ளார். இது போதாது என்று மண்டல அளவில் இளைஞர் அணி சந்திப்புகள் நடத்துகிறோம் என்று மாநாடுகள் நடத்தி வருகிறார். எங்களுக்கு அடுத்தப்படியாக திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை உதயநிதி சிறப்பாக செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் நடத்திய இளைஞரணி மாநாட்டால் எதிர்க்கட்சியில் இருக்கும் பலருக்கு தூக்கம் போய்விட்டது. இனி மேல் மற்ற கட்சிகள் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை திமுக இளைஞரணி தான் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.
பிப்ரவரி 7ம் தேதி விருதுநகரில் இளைஞரணி கூட்டம் என்று சொன்னதும் புது உற்சாகம் பிறந்தது. எதற்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதை விருதுநகர் மாநாட்டில் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan