15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
6 மாசி 2026 வெள்ளி 11:42 | பார்வைகள் : 1008
அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது'' என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றன. கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக 34 ஆயிரத்து 237 கோடி மதிப்பில் முதலீடு, 55 ஆயிரத்து 96 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது. பிப்ரவரி 12ம் தேதி கருத்தரங்கில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan