Paristamil Navigation Paristamil advert login

தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ்

தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ்

4 மாசி 2026 புதன் 13:18 | பார்வைகள் : 216


தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ்

இப்படி ஒருமுறையாவது பிரஸ் மீட்டுக்கு வர சொல்லுங்கள், நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். அவர் எதுவும் தெரியாமல், அறியாமல் பேசுகிறார், என நடிகர் விஜயை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடுமையாக சாடி உள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார்.

வாக்குறுதிகள் விபரம் பின்வருமாறு:

* முதியோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3ம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1200ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழக்கப்படும்.

* மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டி போட்டியின் போது வீரர்கள் உயிரிழந்தால் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 ஆயிரமும், போட்டி நடத்த

அரசின் சார்பில் மானியம் ரூ.5 லட்சம் வழங்கப்படும். தற்போதுள்ள ஆன்லைனில் பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறை பின்பற்றப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் அதிகமான அறிவிப்புகள் வரும். ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது பரிசீலனையில் இருக்கிறது. அதிமுக தலைமையில் அமை க்கப்பட்டுள்ள தேஜ கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றிய கேள்விக்கு இபிஎஸ் அளித்த காட்டமான பதில்:

அவர் (விஜய்) பொதுவெளியில் வந்து பார்த்தால் தானே தெரியும். பொதுவெளியில் வரவில்லை. ஒரு சம்பவம் நடந்து போய்விட்டது. 72 நாட்கள் ஒரு கட்சி தலைவர் வெளியில் வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. எந்தெந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரியவில்லை.

எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்கும் என்று தெரியவில்லை. அவருக்கு ஒன்னுமே தெரியாத போது, எங்களிடம் கேள்வி கேட்டால், அவரிடம் போய் கேள்வி கேளுங்கள்.


அவர் மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வது இல்லை. அவரை பற்றி எங்களிடம் கேள்வி கேட்கலாமா?

ஊழல் சக்தி என்றால் எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டார். அவர் யாரை கூட வைத்து கொண்டு ஊழல் என்று சொல்கிறார். அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்