ஏழு மாதங்கள் நீடிக்கும் பெரிய போர் - பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு
4 பங்குனி 2026 புதன் 11:48 | பார்வைகள் : 2213
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதைத் தொடர்ந்து ஈரான் நடத்திவரும் தாக்குதல்கள் என மத்திய கிழக்கு பகுதிகளில் உருவாகியுள்ள போர்ச்சூழலால் உலகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.
நான்கு நாட்கள் போர்ச்சுழலே உலகத்தை பரபரப்படையச் செய்துவிட்ட நிலையில், இந்த நேரத்தில் பிரபல பிரெஞ்சு ஜோதிடக்கலைஞர் ஒருவரின் 2026ஆம் ஆண்டைக் குறித்த கணிப்புகளை வெளியிட்டு அச்சத்தை உருவாக்கியுள்ளன சர்வதேச ஊடகங்கள்.
பிரபல பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸ் 2026ஆம் ஆண்டு குறித்து கணித்துள்ள விடயங்களில், ’Seven months great war, people dead through evil/ Rouen, Evreux the King will not fail’ என ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதில், Rouen, Evreux ஆகியவை பிரான்சிலுள்ள இடங்கள் ஆகும். விடயம் என்னவென்றால், நாஸ்ட்ரடாமஸ், இந்த ஆண்டு இப்படி நடக்கும் என எதையுமே நேரடியாகக் கூறியதில்லை.
1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாஸ்ட்ரடாமஸின் Les Prophéties, அதாவது, 'The Prophecies' என்னும் புத்தகத்தில், அவர் எதிர்காலம் குறித்த பல விடயங்களை கவிதை நடையில் எழுதிவைத்துள்ளார்.
அதற்கு அவ்வப்போது விளக்கம் கொடுத்துவருகிறார்கள் அவரது கருத்துக்களை பின் தொடர்பவர்கள்.
அவ்வகையில்தான், ஏழு மாதங்கள் மகா பெரிய போர், மக்கள் தீமையால் உயிரிழப்பார்கள் என்பது போன்ற நாஸ்ட்ரடாமஸ் கூறிய விடயங்களை, சமீப காலமாக நடந்துவரும் ரஷ்ய உக்ரைன் போருடன் மட்டுமல்ல, ஏற்கனவே அமெரிக்கா, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது குண்டு வீசிய விடயத்துடனும் இணைத்துப் பேசுகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்வது நல்லது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan