புதுச்சேரியில் தனித்து போட்டியிட தி.மு.க., முடிவு!
4 பங்குனி 2026 புதன் 12:30 | பார்வைகள் : 171
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், இதுவரை நடந்த 15 சட்டசபை பொது தேர்தல்களில் காங்., 7 முறையும், தி.மு.க., 4 முறையும், அ.தி.மு.க., மற்றும் என்.ஆர்.காங்., தலா இரு முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளன.
மாநிலத்தில் பிரதான கட்சியான காங்., கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி சார்பில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்., 15 தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூ., மற்றும் வி.சி., தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன. அதில், கூட்டணிக்கு தலைமை தாங்கிய காங்., 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பெரும் பின்னடைவை சந்தித்தது. தி.மு.க., 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.
அதைத் தொடர்ந்து கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் இரு கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி தலைமையை கைப்பற்றிடும் பொருட்டு, வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
இதற்காகவே கடந்த ஓராண்டாக இரு கட்சிகளும் 'சிட்டிங்' (காங்., - 2, தி.மு.க., - 6) தொகுதிகளை தவிர்த்த பிற 22 தொகுதிகளிலும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒருபடி மேலாக தி.மு.க., வரும் தேர்தலில் 30 தொகுதிகளிலும் போட்டியிட அதிரடியாக தயாராகி வருகிறது.
புதுச்சேரி அரசியல், பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இண்டி கூட்டணியில் தி.மு.க., - காங்., கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளும் முரண்டு பிடித்து வருவதால், இண்டி கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி தி.மு.க., வரும் தேர்தலில் 30 தொகுதியிலும் போட்டியிடும் வகையில் தொகுதிக்கு 2 வேட்பாளர்களை தயார் செய்து வைத்துள்ளது.
தற்போதைய கூட்டணியை கட்சி தலைமை தொடர்ந்தால், கட்சி தலைமை உத்தரவின்படி காங்., கட்சிக்கு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது; மாறாக காங்., உடன் கூட்டணி இல்லை எனில், தனது தலைமையில் இந்திய கம்யூ.,- வி.சி.., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தொகுதிகளை பங்கிட்டு தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்து, அதற்கேற்ப தயாராகி வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan