Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் தரைத் தாக்குதல் - இஸ்ரேலுக்கு எச்சரிக்கை — எமானுவல் மக்ரோன்!

லெபனானில் தரைத் தாக்குதல் - இஸ்ரேலுக்கு எச்சரிக்கை — எமானுவல் மக்ரோன்!

3 பங்குனி 2026 செவ்வாய் 20:43 | பார்வைகள் : 799


பிரான்ஸ் அதிபர் எமானுவல் மக்ரோன், லெபனானில் தரை நடவடிக்கை மேற்கொள்ளும் எண்ணத்திலிருந்து இஸ்ரேல் விலக வேண்டும் என்று இன்று செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார். அத்தகைய நடவடிக்கை 'ஆபத்தான இராஜ தந்திர ரீதியான தவறு' ஆகும் என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், இஸ்ரேலை முதலில் தாக்கியதன் மூலம் ஹெஸ்பொல்லா 'கடுமையான தவறு' செய்துள்ளது என்றும் அவர் கண்டித்துள்ளார்.

«கடந்த சில மணி நேரங்களாக, போர் லெபனானுக்கும் பரவி வருகிறது. அங்கிருந்து ஹெஸ்பொல்லா இஸ்ரேலைத் தாக்கி, லெபனானியர்களை ஆபத்தில் ஆழ்த்தும் பெரிய தவறு செய்துள்ளது.»

இஸ்ரேல் லெபனானின் நிலப்பரப்பையும் அதன் முழுமையையும் மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

«லெபனானின் பாதுகாப்பை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அவர்களின் தைரியமான முயற்சிகளில், பிரான்ஸ் லெபனான் அதிகாரிகளின் பக்கத்தில் நிற்கிறது«

எனவும் தனது தொலைக்காட்சி உரையில் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026