சஹாரா மணற்புயல் - முழு பிரான்சும் பாதிப்பு - வாகனங்கள் பாதிப்பு!
3 பங்குனி 2026 செவ்வாய் 19:37 | பார்வைகள் : 510
வானிலை நிபுணர்களின் கணிப்பின்படி, சஹாராவிலிருந்து எழும் மணல் மேகம் இந்த வாரம் பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் வானத்தை மங்கச் செய்யும். இதன் உச்சம் இந்த வியாழக்கிழமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ எதிர்பார்க்க வேண்டியவை.

மார்ச் மாதத்தின் முதல் வாரம் செம்மஞ்சல் நிற வானத்துடன் பாதிப்படையும். 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் பிரான்சில் மிகக் கடுமையான வானிலை மாற்றங்களால் பாதிப்படைந்தது.
குறிப்பாக, தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் மழை பெய்து சாதனை படைத்தது. கடந்த ஒரு வாரமாக, சூரிய ஒளியும், பருவத்திற்கான சாதாரண அளவை விட அதிகமான வெப்பநிலையும் நிலவுவதால், நாடு சிறிய ஓய்வை அனுபவித்து வருகிறது.
மார்ச் மாதத்தின் இந்த முதல் வாரத்திலும் சூரிய ஒளி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வானத்தை மங்கச் செய்யும் மற்றொரு வகை குழப்பம் உருவாக உள்ளது.
சஹாரா மணற்புயல், செவ்வாய்க்கிழமை முதல் பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றத் தொடங்கும்; இதன் உச்சம் மார்ச் 5 வியாழக்கிழமை நிகழும்.
முதன்மையான பாலைவனத் தூசி மேகங்கள் செவ்வாய்க்கிழமை பிரெனே மலைத்தொடரிலிருந்து காணப்படத் தொடங்கும். பின்னர் வியாழக்கிழமை நாட்டின் பெரும்பகுதிகளுக்கு பரவும.
«காற்றில் இருக்கும் இந்த மணல் துகள்கள், ஏற்கனவே உள்ள மாசு துகள்களுடன் சேர்ந்து, காற்றுத் தரத்தை மேலும் மோசமாக்குகின்றன» பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த சஹாரா மணல் உங்கள் மகிழுந்துகளில் மஞ்சள் நிறம் கொண்ட தடிமனான தூசியாக படியும். வாகனங்கள் இதனால் அழுக்கடையும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan