இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்; சொல்கிறார் ராமதாஸ்
4 பங்குனி 2026 புதன் 09:41 | பார்வைகள் : 1271
இன்னும் மூன்று நாட்களில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும், என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், நிருபர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி:
பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, சட்டசபை தேர்தல் பணி செய்ய உற்சாகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், கட்சியின் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. முக்கியமான காலகட்டத்தில், பா.ம.க., இருக்கிறது. தேர்தலுக்கான கூட்டணி பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை.
அதனால், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். அரசியலில் மாற்றங்கள் வருவது இயற்கைதான். ஒரு முடிவு எடுத்து விட்டால், அதில் உறுதியாக இருப்போம். அடுத்து வரும் மூன்று நாட்கள், தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பை, அனைத்து ஊடகங்களும் நிச்சயமாக பறைசாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan