இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
4 பங்குனி 2026 புதன் 05:20 | பார்வைகள் : 1429
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத்தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பதிலுக்கு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது காணப்படும் சூழலை கவனத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். உரிய எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், துபாயில் உள்ள துணை தூதரகம் இரண்டும் வழக்கம் போல் செயல்பாட்டில் உள்ளன. தேவை ஏற்படும் பட்சத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
அவசர தகவல்ளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் 800-46342 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் +971543090571 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களை கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan