'சேயோன்' படத்தில் கமல் நடிப்பாரா?
3 பங்குனி 2026 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 1705
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த 'அமரன்' படத்தில் ஹீரோவாக நடித்தார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். அந்த படத்தில் கமல் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் ஆசை நிறைவேறவில்லை. இப்போது. மீண்டும் கமல் தயாரிக்கும் 'சேயோன்' படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்தை 'தாய்கிழவி'யை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளார். இதில் கமல் கவுரவ வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் தாய்கிழவியில் கமலின் பாடல்களை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் சிவகுமார் முருகேசன். அவர் தீவிர கமல் ரசிகர் எனக் கூறப்படுகிறது. அதனால் சேயோன் படத்தில் கமலை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சேயோன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கமலை பாட வைக்கவும் விரும்புகிறாராம். கமல் என்ன முடிவெடிக்கிறாரோ?
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire