வாடகைக்கு இருந்தவரை கொலை செய்த உரிமையாளர்! - குப்பை பையில் இருந்த சடலம்!!
3 பங்குனி 2026 செவ்வாய் 11:50 | பார்வைகள் : 3117
வீட்டில் வாடகைக்கு இருந்த நபர் ஒருவரை வீட்டின் உரிமையாளர் கொலை செய்துள்ளார். இந்த பரபரப்பான சம்பவம் Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பெப்ரவரி 2, திங்கட்கிழமை இரவு 93 ஆம் நிர்வாக காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு பெறப்பட்டது. அதில் பேசிய ஒருவர், Saint-Denis நகரில் வசிக்கும் அவரது நண்பர் ஒருவர் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.
அதை அடுத்து, குறித்த வீட்டின் முகவரிக்கு சென்று விசாரித்தபோது அவர் அங்கு இல்லை என தெரியவந்தது. ஆனால் அவரது கார், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு, தூசு படிந்து இருந்துள்ளது.
சந்தேகம் கொண்ட காவல்துறையினர், வீட்டினை சல்லடையிட்டு தேடினர். அதன்போது அவர்கள் தேடி வந்த நபர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் குப்பை கட்டும் பையில் துண்டு துண்டுகளாக கட்டப்பட்டு வீசப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர்.
உடனடியாக குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கொலை சம்பவத்தை வீட்டின் உரிமையாளரே மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை.
கொலைச் சம்பவம் இடம்பெற்று ஒரு வாரத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan