பிரித்தானியாவை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்...!
3 பங்குனி 2026 செவ்வாய் 10:59 | பார்வைகள் : 318
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தாக்குதலை நடத்தி வருவது மிக கவலைக்குரியது என ஸ்டார்மர் தெரிவித்த நிலையில் தனது ஆதரவை அமெரிக்காவுக்கு பிரித்தானியா வழங்க வில்லை என்பதால் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரை முன்னெடுக்க அமெரிக்கா இனி பிரித்தானியாவை சார்ந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போருக்கு ஆதரவு வழங்க மறுத்ததற்காக பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால் அமெரிக்கா - பிரித்தானியா இடையிலான சிறப்பு உறவு (Special Relationship) பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஸ்டார்மர் குறித்து ட்ரம்ப் கூறுகையில்,
“அவர் உதவியாக இருக்கவில்லை. பிரித்தானியாவில் இருந்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகள் கணிசமாக மாறிவிட்டது.
இது முற்றிலும் மாறுபட்ட உலகம். உங்கள் நாட்டுடன் முன்பு இருந்த உறவிலிருந்து இது மிகவும் வேறுபட்டது.
ஒருகாலத்தில் மிகவும் உறுதியான கூட்டணியாக இருந்த இந்த உறவு இவ்வளவு அழுத்தத்தை சந்திக்கும் என்று நினைக்கவில்லை” என கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan