ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம்
3 பங்குனி 2026 செவ்வாய் 10:53 | பார்வைகள் : 959
இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம் பதியப்பட்டுள்ளது.
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.
இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இவ்வாறு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan