கனடாவிடம் இருந்து யுரேனியம் வாங்க இந்தியா ஒப்பந்தம்!
3 பங்குனி 2026 செவ்வாய் 10:02 | பார்வைகள் : 211
இந்தியா - கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க வகையில், அரிய வகை கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பாக நம் நாட்டின் ஆக்கப்பூர்வ அணுசக்தி தேவைக்காக, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை, 2035ம் ஆண்டு வரை வழங்க கனடா முன்வந்துள்ளது. இதன் மூலம், நம் நாட்டின் அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது என கூறப்படுகிறது.
வட அமெரிக்க நாடான கனடா பிரதமர் மார்க் கார்னி, நான்கு நாள் அரசுமுறை பயணமாக கடந்த 27ம் தேதி நம் நாட்டிற்கு வந்தார். மும்பையில் தரையிறங்கிய அவர், தொழிலதிபர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். பிரதமர் மோடியை டில்லியில் நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக அணுமின் உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம், நம் நாட்டுக்கு கனடா யுரேனியத்தை வழங்கும். இது தவிர, அரியவகை கனிமங்கள் உள்ளிட்ட துறையில் ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா - கனடா இடையே, 2030ம் ஆண்டுக்குள் இரு நாட்டு வர்த்தகத்தை, 4.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு. பொருளாதாரத்தில் முழு கூட்டுறவுக்கு முன்னு ரிமை தர உள்ளோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யஉள்ளோம். இது முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கூட்டுறவு ஏற்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வ அணுசக்தி துறையில் கனடாவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நம் நாட்டிற்கு நீண்ட காலத்திற்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஒப்பந்தம் தான் அது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan