Paristamil Navigation Paristamil advert login

பழனிசாமி முடிவு செய்வார்: தொகுதி பங்கீடு குறித்து பியூஸ் கோயல் தகவல்

பழனிசாமி முடிவு செய்வார்: தொகுதி பங்கீடு குறித்து  பியூஸ் கோயல் தகவல்

3 பங்குனி 2026 செவ்வாய் 07:50 | பார்வைகள் : 198


தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு உங்கள் 'பாஸ்' பழனிசாமி தான். அவர் தான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்,'' என, மதுரையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ., தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.  

மதுரையில் நேற்றுமுன்தினம் தே.ஜ., கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி , அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற் றனர். நேற்றுமுன்தினம் காலையிலேயே மதுரை வந்த அவர்கள், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் அருகே ஓட்டலில் தங்கினர்.  

மாலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுஇரவு ஓட்டலுக்கு திரும்பிய கூட்டணி தலைவர்கள் பியூஸ் கோயல் தலைமையில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து விவாதித்தனர்.

அப்போது பா.ஜ., ஏற்பாட்டில் கூட்டணியில் சேர்ந்த சில கட்சி தலைவர்கள், தொகுதி பங்கீடு குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த பியூஸ் கோயல், ''தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு உங்கள் 'பாஸ்' பழனிசாமி தான். அவர்தான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்,'' என சிரித்துக்கொண்டே கூறினார். எல்லோரது பார்வையும் பழனிசாமி பக்கம் திரும்பியது. அவரும் தன் பங்கிற்கு சிரித்தார். தொகுதி பங்கீடு குறித்து வாய் திறக்கவில்லை.

கூட்டணி கட்சித் தலைவர்கள் புறப்பட்டு சென்றனர். அதன்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, 'பா.ஜ., ஏற்பாட்டில் கூட்டணியில் சேர்ந்த கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் பா.ஜ., தனக்கு ஒதுக்கப்படும் 'சீட்'டில் இருந்து பிரித்துக் கொடுக்கும்' என பழனிசாமி பிடிகொடுக்காமல் பேசினார்.

தொகுதி பங்கீடு குறித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்குபின் தான் பேச்சுவார்த்தை என்பதில் அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் உறுதிசெய்துள்ளார்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026