அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள் : பிரான்ஸ் அணு தடுப்பு வலுப்படுத்தப்படும் குடியரசுத் தலைவர் அறிவிப்பு!!
2 பங்குனி 2026 திங்கள் 17:21 | பார்வைகள் : 707
குடியரசுத் தலைவர் இம்மானுவல் மக்ரோன் இன்று 2 ஆம் திகதி திங்கள்கிழமை Brest அருகிலுள்ள Île Longue எனும் அணு தடுப்பு மையத்தில் இருந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதல் பின்னணியில் ஆற்றப்பட்ட இவ்வுரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “தேசிய மற்றும் ஐரோப்பிய சவால்களுக்கு ஏற்ப மாற்றங்களை அறிவிக்க வந்துள்ளேன்” என தெரிவித்த அவர், பல்வேறு அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் பிரான்ஸ் தனது அணு தடுப்பு திறனை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
அணு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார். எனினும், ஆயுதங்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட மறுத்த அவர், தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பதே இதன் நோக்கம் என கூறினார்.
பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் உடன் சேர்ந்து ஐரோப்பாவில் அணு ஆயுதம் கொண்ட இரண்டு நாடுகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஐரோப்பிய கூட்டாளிகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜெர்மனி மற்றும் போலந்து உடன் அணு தடுப்பு பாதுகாப்பு குறித்து மூலோபாய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அணு குண்டுகளை ஏந்தக்கூடிய பிரான்ஸ் விமானங்களை பிற ஐரோப்பிய நாடுகளில் தங்குமிடமளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவது, “பிரான்ஸ் அணுக் குடைமர பாதுகாப்பு” அமைப்பை நோக்கிய முதல் கட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan