ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
2 பங்குனி 2026 திங்கள் 15:01 | பார்வைகள் : 1571
ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* ஈரான் ஆதரவு பேச்சாளர்கள், சமூக வலைதளத்தில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்கள் மற்றும் போராட்டங்களை நடத்த முயற்சிப்பவர்களை கண்காணிக்க வேண்டும்.
* அனைத்து மாநில அரசுகளும் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
* சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறை தூண்டுதல் போன்றவற்றை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம். இந்தியாவில் மத ரீதியிலான பதற்றம், வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan