Laurent Nuñez: யூத வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு!!
2 பங்குனி 2026 திங்கள் 07:56 | பார்வைகள் : 1819
Laurent Nuñez அவர்கள், நாட்டில் உள்ள யூத வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பை Pourim விழாவை முன்னிட்டு வலுப்படுத்துமாறு மாகாண ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் Iran மீது நடத்திய தாக்குதல்களின் பின்னணியில் நிலவும் பதற்றமான பன்னாட்டு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளூர் அபாய நிலை மதிப்பீட்டின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பொதுச் சட்ட ஒழுங்கை பாதிக்கக்கூடிய செயல்களை கண்காணிக்கவும், வெளிநாட்டு தலையீட்டு முயற்சிகள் இருப்பின் அவற்றை நுண்ணறிவு அமைப்புகளுக்கு தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan