ஈரானிற்கு எதிரான மக்ரோனின் நிலைப்பாடு!!
1 பங்குனி 2026 ஞாயிறு 21:58 | பார்வைகள் : 727
குடியரசுத் தலைவர் எமானுவல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை சபை கூட்டம் சுமார் 19h30 மணியளவில் தொடங்கியது.
அவர் ஆரம்பக் குறிப்புகளில் கூறியதாவது,
• 'எங்கள் நாட்டினரின் பாதுகாப்பே முதன்மை.'
• 'அதே நேரத்தில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பும், அவர்களின் இறையாண்மையும் முக்கியமானவை'.
அபுதாபியில் உள்ள பிரான்ஸ் கடற்படைத் தளத்தை ட்ரோன் தாக்குதல் தாக்கியதைத் தொடர்ந்து, மக்ரோன்
• 'இது, பாதுகாப்பு உடன்படிக்கைகள் கொண்டுள்ள எங்கள் நட்பு நாடுகளின் பக்கத்தில் நிற்கும் வகையில், எங்கள் பாதுகாப்பு நிலைப்பாட்டையும் ஆதரவையும் உயர்த்த வேண்டிய நிலைக்கு எங்களை கொண்டு செல்கிறது.'
• 'கடந்த சில மணி நேரங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப எங்கள் பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த தாக்குதல்களுக்கு எந்த நியாயமும் இல்லை, மேலும் அவற்றை நாம் ஏற்கமாட்டோம்.'
என இதன் மூலம் ஈரானிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை எமானுவல் மக்ரோன் வலிறுத்தி உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan