Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : பிரெஞ்சு இராணுவ முகாம் மீது ஈரான் தாக்குதல்!!

விசேட செய்தி : பிரெஞ்சு இராணுவ முகாம் மீது ஈரான் தாக்குதல்!!

1 பங்குனி 2026 ஞாயிறு 18:39 | பார்வைகள் : 907


பிரெஞ்சு இராணுவ முகாம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. முகாம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டத்தை அடுத்து ஈரான் மிக மூர்க்கத்தனமாக மத்திய கிழக்கின் பல இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. பல இராணுவ முகாம்களை இலக்குவைத்து தொடர் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், அபுதாபியில் உள்ள Camp de la Paix எனும் பிரெஞ்சு இராணுவ முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் எவரேனும் கொல்லப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

அதேவேளை, அமெரிக்க-இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் இந்த ஈரான் மீதான தாக்குதலில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து அபுதாபியில் பிரான்ஸ் குறித்த முகாமை அமைத்து அங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், ஆயுதங்களை சேமித்து வைத்தும் உள்ளது. 

🔥 இன்றைய சிறப்பு சலுகை