Paristamil Navigation Paristamil advert login

அதியுச்ச விழிப்புணர்விற்கு ஆணை!

அதியுச்ச விழிப்புணர்விற்கு ஆணை!

1 பங்குனி 2026 ஞாயிறு 17:52 | பார்வைகள் : 404


அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானில் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் லொரோன் நுனெஸ் (Laurent Nuñez) இந்த சனிக்கிழமை அனுப்பிய தொலைநகலில் பிரான்ஸ் முழுவதும் உள்ள மாவட்ட ஆணையங்கள் அதியுச்ச விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் லோரன் நுனெஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர், நாட்டின் பொது ஒழுங்கை பாதிக்கக்கூடிய எந்தச் செயலையும் கண்டறிய பிரான்சின் காவல்துறையினருக்கு ‘விழிப்புணர்வை அதிகரிக்க’உத்தரவிட்டுள்ளார்.

Media

ஈரானின் போர் பிரான்சிற்குள்ளும் பாதிப்புகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தக் கூடியது.

மாவட்ட ஆணையங்கள் பெற்ற தொலைநகலில், அமைச்சர், பிரான்சில் உள்ள தூதரகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் முக்கிய இடங்கள் சுற்றியுள்ள பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், இந்த மோதலுடன் தொடர்புடைய எந்தவொரு தாக்கம் செலுத்தும் முயற்சியையோ அல்லது நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்தும் செயலையோ, குறிப்பாக அது வன்முறையாக மாறக்கூடியதாக இருந்தால்,உடனடியாக உளவுத்துறைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆணையங்களிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச சூழ்நிலையுடன் தொடர்புடைய, வரவிருக்கும் நாட்களில் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் சிறப்பு கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் லொரோன் நுனெஸ் தெரிவித்துள்ளார். பொது ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் இருந்தால், அதிகாரிகள் 'தகுந்த நடவடிக்கைகள்' எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்த, பிரான்சில் உள்ள ஈரானிய சமூகத்தினரின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஒன்றுகூடல்களிற்கும் அதிகப்படியான பாதுகாப்பு கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.