அபுதாபியில் பிரெஞ்சு கடற்படைத் தளம் தாக்கப்பட்டது!!
1 பங்குனி 2026 ஞாயிறு 21:00 | பார்வைகள் : 282
Base navale d'Al Salam எனப்படும் பிரெஞ்சு கடற்படைத் தளம், அபுதாபி நகரில் மார்ச் 1 ஞாயிற்றுக்கிழமை ஈரானிய ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு இராட்சியத்தில் உள்ள மூன்று பிரெஞ்சு இராணுவத் தளங்களில் ஒன்றாகும். தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் கிடங்கை குறிவைத்து, இரண்டு கண்டெய்னர்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகளோ காயம்களோ எதுவும் இல்லை; தளம் இயல்பாக செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலாக ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. உச்சத் தலைவர் Ali Khamenei உயிரிழந்ததற்குப் பழி வாங்க வேண்டும் என ஈரான் முன்பு அறிவித்திருந்தது. சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு இராட்சியத்தில் மூவர் உயிரிழந்து 58 பேர் காயமடைந்துள்ளனர்; ஐக்கிய அரபு இராட்சியம் ஈரானை அமைதிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan