சாள்-து-கோல் விமானநிலையம் அருகே பரபரப்பு! - 10 பேர் காயம்!!
1 பங்குனி 2026 ஞாயிறு 15:34 | பார்வைகள் : 790
சாள்-து-கோல் சர்வதேச விமானநிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில், பத்து பேர் வரை காயமடைந்தனர்.
பஸ் ஒன்றும் கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றது. விமானநிலையம் நோக்கி பயணிகள் விரைந்துகொண்டிருந்த பரபரப்பான காலை நேரத்தில் இந்த விபத்து, போக்குவரத்து தடையை ஏற்படுத்தியது. காலை 8.30 மணி அளவில் விபத்து ஏற்பட்டது. இரண்டரை வயது சிறுவன் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
15 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு, மீட்புப்பணி இடம்பெற்றது. மிக வேகமாக போக்குவரத்து தடையை காவல்துறையினர் விலத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan