18 வயதுக்கு முன் குடும்ப உதவித்தொகை அதிகரிப்பு, இனி 14 வயதில் இல்லை!!
28 மாசி 2026 சனி 20:16 | பார்வைகள் : 5040
Caisse d’Allocations Familiales (CAF) அறிவிப்பின்படி, நாளை முதல், குடும்பத்தில் இளைய குழந்தை 14 வயதை எட்டும்போது வழங்கப்பட்ட குடும்ப உதவித்தொகை (allocations familiales) அதிகரிப்பு இனி வழங்கப்படாது. இந்த அதிகரிப்பு இப்போது குழந்தை 18 வயதை எட்டும் போது மட்டுமே வழங்கப்படும்.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வருடத்திற்கு அதிகபட்சம் 900 யூரோ வரை வருமானக் குறைவு ஏற்படலாம். மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், நாட்டில் வரலாற்றிலேயே குறைந்த பிறப்பு விகிதம் நிலவும் சூழலில், புதிய “பிறப்பு விடுப்பு” (congé de naissance) திட்டத்துக்கு நிதியளிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த விதிமுறை
இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பங்களில், இளைய குழந்தை 14 வயதை எட்டும்போது உதவித்தொகை உயர்வு வழங்கப்பட்டது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களில், ஒவ்வொரு குழந்தையும் 14 வயதை எட்டும் போது, 20 வயது வரை இந்த உயர்வு வழங்கப்பட்டது.
புதிய மாற்றம் – 18 வயதில் மட்டுமே உயர்வு
மார்ச் 1 முதல், இந்த உயர்வு குழந்தை 18 வயதை எட்டிய பின்னரே வழங்கப்படும். ஆனால், மார்ச் 1க்கு முன் 14 வயதை எட்டிய குழந்தைகளின் குடும்பங்கள் பழைய திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நன்மை பெறுவார்கள். 14 வயதில் வழங்கப்பட்ட அதிகரிப்பு மாதத்திற்கு 75.90 (வருடத்திற்கு 900 யூரோக்கும் மேல்) யூரோக்களாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan