மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: கூட்டாளிகளை பாதுகாக்கத் தயாராக இருப்பதாக மக்ரோன் அறிவிப்பு!!
28 மாசி 2026 சனி 17:01 | பார்வைகள் : 4681
பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல்களுக்கு பிந்தைய பதற்ற உயர்வு அனைவருக்கும் ஆபத்தானது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைமை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்த அவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பிற்கும் மத்திய கிழக்கில் உள்ள குடிமக்கள் மற்றும் கூட்டாளிகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், ஈரான் தனது அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர நல்லநம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், பிராந்திய நிலை தடுமாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan