ஈரான் மீது இருமுனை தாக்குதல்! - எயார் பிரான்ஸ் விடுத்த அறிவித்தல்!!
28 மாசி 2026 சனி 11:15 | பார்வைகள் : 4257
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இருமுனை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கு எங்கும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.
இந்நிலையில், எயார் பிரான்ஸ் நிறுவனம் இன்று பெப்ரவரி 28, சனிக்கிழமை முதல் Tel Aviv மற்றும் Beirut நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளையும் இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த தடை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
"செல்லுமிடத்தின் பாதுகாப்பு நிலைமை காரணமாக, பிப்ரவரி 28 ஆம் தேதி டெல் அவிவ் மற்றும் பெய்ரூட்டுக்கு திட்டமிடப்பட்டிருந்த விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது," என எயார் பிரான்ஸ் AFP ஊடகத்துக்கு தெரிவித்தது.
ஈரான், ஈராக், இஸ்ரேலிய வான்பரப்புக்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் மீது ஏவுகணைகள் பறப்பதும், ஈரானின் சில இடங்களில் குண்டுமழை பொழிவதுமாக இன்று சனிக்கிழமை காலை விடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan