தாக்க வந்தது ரஷ்ய ட்ரோன்! - திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!!
28 மாசி 2026 சனி 07:00 | பார்வைகள் : 2764
சாள்-து-கோல் கப்பலை தாக்க முற்பட்ட ட்ரோன் ரஷ்யாவைச் சேர்ந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடனின் Malmö பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அதிநவீன விமான தாங்கி இராணுவக் கப்பலான சாள்-து-கோல் மீது சென்ற புதன்கிழமை ஆளில்லா ட்ரோன் ஒன்று தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டது.
ஆனால் 10 கி.மீ தொலைவில் வைத்து ஸ்வீடன் இராணுவத்தால் குறித்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சில மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த ட்ரோன் ரஷ்யாவினால் ஏவப்பட்டது எனவும், அது ஒரு ரஷ்ய கப்பலில் இருந்து ஏவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சம்பவம் நடந்த நேரத்தில் ரஷ்ய உளவுத்துறை கப்பலான ஜிகுலேவ்ஸ்க் ஸ்வீடிஷ் பிராந்திய நீரில் பயணித்துக் கொண்டிருந்தது" என அவர்கள் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan